என் மலர்
நீங்கள் தேடியது "Perunthalaivar Makkal Party"
- தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் தீபாவளி விழா நடைபெற்றது .
- மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் அலுவலகத்தில் கேக் வெட்டினார்.
தூத்துக்குடி:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் தீபாவளி விழா நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் அலுவலகத்தில் கேக் வெட்டினார். பின்னர் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வெடி வெடித்து கொண்டாடினர்.
நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வின்சென்ட், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர்,என். சண்முகவேல், சிவத்தை சரவணன், அருண், ராஜ் நாடார்,கார்த்திக்,கதிர், ரஞ்சித், கதிரேசன், சரவண குமார், சிவகுமார், ஹரி, சூர்யா, அஸ்கர், பெத்து விஷ்ணு, சிவத்தை தினேஷ், கூட்டாம்புளி கார்த்திக், சக்கம்மாள்புரம் ராஜ், அலாட் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






