search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People project"

    • மக்கள் திட்டப்பணிகளை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. துணைத்தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் நகர்மன்றத்தலைவர் செஹனாஸ் ஆபிதா வாழ்த்து தெரிவித்தார். துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கூட்டத்தில் பேசிய தலைவர், கீழக்கரை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவ டைந்துள்ளது. மக்கள் கோரி க்கைகளை நிறைவேற்ற எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கீழக்கரை பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதேபோன்று ஆதரவு தந்து கீழக்கரை மக்களுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் குறைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுவதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, கீழக்கரை வட்டாட்சியர் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    நகர் பகுதியில் மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து வாசிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் தேவையான பணிகள் குறித்து விளக்கி பேசினர்.

    கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள நகர்மன்ற தலைவர் அறிவுரை வழங்கினார்.

    கவுன்சிலர் சுகைபு:- கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு தனி நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நகராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அரசு மருத்துவமனையில் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.

    கவுன்சிலர் முகம்மது காசிம்:- 14-வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்காத நிலை உள்ளது. உடனடியாக மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் வீடு வீடாகச்சென்று வரி வசூல் செய்வதற்கு தயாராக உள்ளேன்.

    சப்ராஸ் நவாஸ்: ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் முழுமையாக எரியவில்லை. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

    பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கூட்டத்தில் மேற்பார்வை யாளர்கள் சம்பாசிவம், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவ லர்கள் தமிழ்ச் செல்வன், உதயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    ×