search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penalty for"

    • விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
    • தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இதையடுத்து ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    ஈரோடு சத்தி ரோடு, ஈரோடு மார்க்கெட் பகுதியில் வரும் சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் இன்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மார்க்கெட் பகுதி மற்றும் சத்தி ரோடுகளில் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    ×