search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penalties for motorists"

    • பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிப்பு
    • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு செய்த திருத்தங்களின் அடிப்படையில் உள்ளன. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    திருத்தப்பட்ட தொகையின் கீழ், செல்லுபடியாகும் லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,500 முதல் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சிக்னல்களைத் தாண்டுபவர்களுக்கு ரூ.1,000,அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ரூ.500 மற்றும் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுபவர்களுக்கு முதல் முறை விதிமீறல் செய்தால் ரூ.1,000 அபராதமும், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.

    ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற அரசாங்க அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    அவசரமாக வாகனம் ஓட்டினால், முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.1,000 அபராதமும், அவர்கள் பழக்க வழக்கக் குற்றவாளிகளாக இருந்தால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். பொதுச் சாலைகளில் நடக்கும் சட்டவிரோத ரேஸ் முதல் முறை ரூ.5,000 ஆகவும், 2-வது முறை 10,000 ஆகவும் இருக்கும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.1,000, மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ரூ.2,000 ஆகவும் உள்ளது.

    தமிழகத்தில் 28-ந் தேதி முதல் இந்த ஸ்பார்ட் பைன் முறை முழுமையாக அமலுக்கு வரும் என உத்தரவிடப்பட்டது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார், இ-சலான் சாதனங்களை மேம்படுத்துவதால், போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிதாக திருத்தப்பட்ட ஸ்பாட் அபராதத்தை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர்.

    திருத்தப்பட்ட அபராதம் குறித்து பல வாகன ஓட்டிகள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை. மேலும், போக்குவரத்து போலீசாருக்கு மேம்படுத்தப்பட்ட இ-செலான் சாதனங்களை இயக்கவும் பயிற்சி அளிக்க வேண்டும்.

    அக்டோபர் 30-ந் தேதி ராமநாதபுரத்திற்கு தேவர் ஜெயந்தி விழாவிற்காக ஏராளமான போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பதால், திருத்தப்பட்ட அபராதம் விதிக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய அபராதங்களை அமல்படுத்துவதற்கு முன், மறு பரிசீலனை செய்யப்பட்ட விதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வாகன விபத்துக்களை குறைக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக தொடர்ந்து போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுகிறது

    இந்த நிலையில் அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களின் லைசன்சை ரத்து செய்ய போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்.

    வாகன விபத்தை குறைக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பர்மிட், தகுதிச்சான்று இல்லா மல் இயக்கப்படும் வாக னங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் போலீசாரின் பரிந்துரையின் பேரில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 324 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிமாக வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் விபத்துக்களால் உயிரிழப்பை ஏற்படுத்திய 324 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ள்ளது. இதுபோன்ற நட வடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றனர்.

    • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
    • வாகனம் ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட் பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    ஏலகிரி மலை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ஏலகிரிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் வருவதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன .

    கடந்த மாதம் மோட் டார்சைக்கிளில் 5 பேர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் தீவிரவாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகன சோதனையின் மூலம் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர், நான்கு பேர் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்றவை தடுக்கப்படுகிறது. ஏலகிரி மலைக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்கள் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், குடிபோதயில் வாகனம் ஓட்டியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதம் விதித்தனர்.

    ×