search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத முறை அமல்படுத்துவது தாமதம்
    X

    திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத முறை அமல்படுத்துவது தாமதம்

    • பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிப்பு
    • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு செய்த திருத்தங்களின் அடிப்படையில் உள்ளன. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    திருத்தப்பட்ட தொகையின் கீழ், செல்லுபடியாகும் லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,500 முதல் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சிக்னல்களைத் தாண்டுபவர்களுக்கு ரூ.1,000,அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ரூ.500 மற்றும் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுபவர்களுக்கு முதல் முறை விதிமீறல் செய்தால் ரூ.1,000 அபராதமும், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.

    ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற அரசாங்க அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    அவசரமாக வாகனம் ஓட்டினால், முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.1,000 அபராதமும், அவர்கள் பழக்க வழக்கக் குற்றவாளிகளாக இருந்தால் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். பொதுச் சாலைகளில் நடக்கும் சட்டவிரோத ரேஸ் முதல் முறை ரூ.5,000 ஆகவும், 2-வது முறை 10,000 ஆகவும் இருக்கும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.1,000, மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ரூ.2,000 ஆகவும் உள்ளது.

    தமிழகத்தில் 28-ந் தேதி முதல் இந்த ஸ்பார்ட் பைன் முறை முழுமையாக அமலுக்கு வரும் என உத்தரவிடப்பட்டது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார், இ-சலான் சாதனங்களை மேம்படுத்துவதால், போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிதாக திருத்தப்பட்ட ஸ்பாட் அபராதத்தை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர்.

    திருத்தப்பட்ட அபராதம் குறித்து பல வாகன ஓட்டிகள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை. மேலும், போக்குவரத்து போலீசாருக்கு மேம்படுத்தப்பட்ட இ-செலான் சாதனங்களை இயக்கவும் பயிற்சி அளிக்க வேண்டும்.

    அக்டோபர் 30-ந் தேதி ராமநாதபுரத்திற்கு தேவர் ஜெயந்தி விழாவிற்காக ஏராளமான போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பதால், திருத்தப்பட்ட அபராதம் விதிக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய அபராதங்களை அமல்படுத்துவதற்கு முன், மறு பரிசீலனை செய்யப்பட்ட விதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×