search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pathirakaali Amman"

    • கோவில்பட்டி வேலாயுத புரம் நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அன்னை பத்திரகாளி காளியம்மன் பொங்கல் திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 1008 பக்தர்களுக்கு திருமாங்கல்ய மங்கல பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேலாயுத புரம் நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அன்னை பத்திரகாளி காளியம்மன் பொங்கல் திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலையில் கோவில் முன்பு பொங்கல் திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து மாலையில் முளைப்பாரி ஊர்வலம் முக்கிய வீதிகளில் இருந்து வந்து கும்மி அடித்து வழிபட்டனர். அன்று மாலையில் டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 1008 பக்தர்களுக்கு திருமாங்கல்ய மங்கல பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற உறுப்பினரும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவருமான என்ஜினீயர் தவமணி தலைமை தாங்கினார்.

    நகர் மன்ற உறுப்பினரும் கூட்டுறவு வங்கி இயக்குனருமான லெவராஜா முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் முருகன், கனகலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினார். ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் சீனிவாசன் ஆனந்தவல்லி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தொழிலதிபர் அமளி பிரகாஷ், நகர் மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி கலந்து கொண்டு மங்கள பொருட்களை பக்தர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் சிலம்ப ஆசிரியர் பாலமுருகன், செல்வராணி, சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×