என் மலர்

  நீங்கள் தேடியது "Pandian"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய ரெயில்வே கால அட்டவணைப்படி சில ரெயில்களின் வேகம் கூட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி பயண நேரத்துக்கு முன்பாகவே இந்த ரெயில்கள் இலக்கை சென்றடைந்து விடும்.
  சென்னை:

  புதிய ரெயில்வே கால அட்டவணைப்படி சில ரெயில்களின் வேகம் கூட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி பயண நேரத்துக்கு முன்பாகவே இந்த ரெயில்கள் இலக்கை சென்றடைந்து விடும்.

  அந்தவகையில் நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16352) மற்றும் தாம்பரம்-நெல்லை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16191) ரெயில்கள் பயண நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே சென்றுவிடும்.

  மும்பை சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் வாராந்திர எக்ஸ் பிரஸ் (16351) 45 நிமிடங்களும், நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. வாரம் 4 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16340) 30 நிமிடங்களும், நிஜாமுதீன்-கன்னியாகுமரி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (12642) 25 நிமிடங்களும்,

  சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12667), நாகர்கோவில்-காச்சிக்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் (16354), கோவை-சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244) ஆகியவை 15 நிமிடங்களும்,

  கன்னியாகுமரி-அவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் (12666), சென்னை சென்டிரல்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (22639), சென்னை எழும்பூர்-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), மும்பை சி.எஸ்.எம்.டி.-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (11041), கொல்லம்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (18568) ஆகியவை 10 நிமிடங்களும்,

  மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (16182), திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105), கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12631) மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12243) ஆகியவை 5 நிமிடங்களும் முன்னதாகவே செல்லும்.

  இந்த நடவடிக்கை நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. 
  ×