search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palakad"

    • கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த 3 ெரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

    கோவை:

    கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதி வில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06804), சொர்ணூர் ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை ெரயில்நிலையம் வந்தடையும்.

    இதேபோன்று கோவை-சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெழு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06805), கோவை ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு சொர்ணூர் சென்றடையும்.

    பாலக்காடு-கோவை முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06806), பாலக்காடு ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு கோவை ெரயில் நிலையம் வந்தடையும்.

    கோவை-பாலக்காடு இடையிலான முன்பதிவில்லா மெழு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06807), கோவை ெரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டை சென்றடையும்.

    கோவை-சேலம் இடையி லான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06802), கோவை ெரயில் நிலையத்தில் இருந்து இன்றுமுதல் காலை 9 மணிக்கு புறப்பட்டு. மதியம் 1 மணிக்கு சேலம் ெரயில் நிலையம் சென்றடையும்.

    இதேபோன்று சேலம்-கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்:06803) சேலம் ெரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும். இந்த 3 ெரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    ×