என் மலர்

  நீங்கள் தேடியது "Pakistan Custody"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் பிடியில் இருக்கும் விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்ப நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #IndiaPakistanWar #Abhinandan #AkhileshYadav
  லக்னோ:

  பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.

  இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட தன்னுடைய டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு மனஉறுதி மற்றும் தைரியத்தை வழங்கவும் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன். இந்த நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.  மேலும் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களின் தீரச்செயலுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டும் தெரிவித்தார். #IndiaPakistanWar #Abhinandan #AkhileshYadav 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார். #Pakistan #IndianFishermen #VKSingh
  புதுடெல்லி:

  பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

  பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் எழுத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:-

  மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்த 1,725 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் 1,749 பேர் விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் மீனவர்களின் 57 படகுகளும் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் மீனவர்கள் உள்பட 179 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  பாகிஸ்தான் ஜனவரி 1-ந் தேதி அளித்த அறிக்கையில், தங்கள் நாட்டில் உள்ள சிறையில் 483 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆனால் 503 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களின் 1,050 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. அது பற்றிய தகவலை பாகிஸ்தான் தங்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  இலங்கை கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அந்த மாநில அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.

  வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் தண்டனை காலம் முடிந்தும் 434 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  வெளிநாடுவாழ் இந்திய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொடுமை செய்யப்படுவது தொடர்பாக 5 ஆயிரத்து 379 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார். 
  ×