என் மலர்
நீங்கள் தேடியது "Operation Kamala"
பா.ஜ.க.வின் ‘ஆபரேஷன் கமலா’ திட்டத்தை முறியடிக்க குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் இணைந்து பா.ஜ.க சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு:
மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி, காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மின்சார துறை மந்திரியுமான டி.கே.சிவகுமார் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய ஜமீர் அகமத் ஆகிய 3 பேரும் முன்பு எலியும், பூனையும் போல் எதிரிகளாக இருந்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், இந்த மூவரும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தங்களுக்குள் கூட்டணி அமைத்து உள்ளனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த பிடதி ஈகிள்டன் ரிசார்ட்டிலும், ஐதராபாத்துக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வதிலும் குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் ஆகியோர் பரஸ்பரம் சிரித்துக் கொண்டு, பம்பரமாக சுற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டு, சக எம்.எல்.ஏ.க்களே ஆச்சரியத்தில் மூழ்கினார்.
மேலும், பா.ஜனதா கட்சியின் ‘‘ஆபரேஷன் கமலா’’ திட்டத்தை முறியடிக்க இவர்கள் 3 பேரும் பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மூவர் கூட்டணி, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.