search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oodhiyur forest"

    • பொதுமக்கள் கூறிய பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • 2 ட்ரோன் கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் காங்கயம் ஊதியூர் பகுதியில் கடந்த மாதம், 3ந் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சிறுத்தை பிடிபடவில்லை. இந்நிலையில் கலெக்டர் வினீத், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் காங்கயம் ஆய்வு மாளிகையில் நடந்தது. அதன்பின் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:- பொதுமக்கள் கூறிய பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால் தடத்தின் அளவுகளை வைத்து சுற்றித்திரிவது 6 முதல் 7 வயதுடைய சிறுத்தை. அதனை பிடிக்க நான்கு கூண்டுகள் வைக்கப்பட்டு ள்ளது. 2 ட்ரோன் கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம், கபில்மலை இருகூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. அங்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கரூர் அத்திக்காடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் வந்தது.

    அங்கும் கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் தற்போது திருப்பூர், காங்கயம் ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வரத்து உள்ள பகுதியில் தான் சிறுத்தை நடமாடும். இரையை தேடி நகரும் சிறுத்தை திரும்ப, திரும்ப வனப்பகுதிக்கே சென்று விடும். இதுவரை மனிதர்களை தாக்கவில்லை.சிறுத்தையால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். வனத்துறை சார்பில் 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும், 3 பழங்குடியின மக்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும், அல்லது வனப்பகுதிக்கு விரட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வை க்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×