என் மலர்
முகப்பு » One militant neutralised
நீங்கள் தேடியது "One militant neutralised"
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் டிரகாட் சுகன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
×
X