search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old stone tank"

    • பழமையான கல்தொட்டி அரை அடி ஆழம், 7 அடி நீளம் மற்றும் மூன்றடி அகலம் என மிகவும் பழமை வாய்ந்தது.
    • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் உடல்களை வைத்து சடங்குகள் செய்ய இதனை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புளியம்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:-

    பல்லடம் வட்டாரத்தில் பழமையான கல்வெட்டுகள், சிலைகள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து வருகிறோம்.

    புளியம்பட்டி கிராமத்தில் கண்டறியப்பட்ட பழமையான கல்தொட்டி அரை அடி ஆழம், 7 அடி நீளம் மற்றும் மூன்றடி அகலம் என மிகவும் பழமை வாய்ந்தது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர், இறந்தவர் உடல்களை வைத்து சடங்குகள் செய்ய இதனை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. உடல்களை வைப்பதற்கு வசதியாக, தொட்டியின் தலை பகுதி உயரமாகவும், கீழ் பகுதி பள்ளமாகவும் உள்ளது.கால்நடை தொட்டியாக இருந்தால் 3 அடிக்கு மேல் ஆழம் இருக்கும்.

    எனவே இது உடல்களை வைக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இத்தொட்டியில் உடல்களை வைத்து சடங்குகள் செய்வதால் இறந்தவர் சொர்க்கத்திற்கு செல்வர் என்ற ஐதீகம் இருந்ததை வரலாறு கூறுகிறது. இதேபோல், இன்னொரு கல் தொட்டி நெகமம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ளது.இக்கல் தொட்டியை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் கேட்பாரற்று கிடப்பது கவலை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • நம் முன்னோர் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில் இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர்.
    • கிராம மக்கள் அங்குள்ள கோவிலில் இந்த கல் தொட்டியை வைத்து பாதுகாப்பதாக கூறியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அடுத்த கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையம் கிராமத்தில் பல்லடம் வரலாற்று மையத்தினர் ஆய்வு செய்தபோது, பழமையான கால்நடை கல் தொட்டி ஒன்றை கண்டறிந்தனர்.

    வரலாற்று மையத்தை சேர்ந்த பாண்டியன் கூறுகையில், விவசாய தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில், இதுபோன்ற பழமையான கால்நடை தொட்டிகளை காணலாம். நம் முன்னோர் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில் இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர். கேத்தனூர் மானாசிபாளையத்தில்,க தண்ணீர் தொட்டி ஒன்று ரோட்டோரத்தில் கேட்பாரற்று மண் மூடி கிடந்தது. அதை சுத்தம் செய்து அதிலுள்ள எழுத்துகளை படிக்க முயன்றோம். ஆனால்எழுத்துகள் சேதமடைந்துள்ளதால் படிக்க இயலவில்லை.

    ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முந்தையதாக இது இருக்கலாம் என்றார்.இதையறிந்த கிராம மக்கள்அங்குள்ள கோவிலில் இந்த கல் தொட்டியை வைத்து பாதுகாப்பதாக கூறியுள்ளனர்.

    ×