என் மலர்
நீங்கள் தேடியது "of alcohol;8 people were arrested"
- தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, அம்மாபேட்டை, கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், தாளவாடி, கடம்பூர், பெருந்துறை போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.






