search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nominates"

    பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றுள்ள இம்ரான் கான் கட்சியின் சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். #Pakistanpresidentpost #DrArifAlvi #Pakistanpresident
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபராக பதவி வகிக்கும் மம்னூன் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு  முன்னதாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதிபர் தேர்தலுக்கான  வேட்பு மனுக்கள் இம்மாதம் 27-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர் இறுதிப்பட்டியல் 30-ம் தேதி வெளியாகும். இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் அந்நாட்டின் 22-வது பிரதமராக இன்று பதவியேற்ற சில நிமிடங்களுக்கு பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பல் டாக்டராக தொழில் செய்துவரும் ஆரிப் ஆல்வி(69) இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தொடக்கக்கால தலைவர்களில் ஒருவராவார். கடந்த 2006-2013 காலகட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ள இவர், சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கராச்சி தொகுதியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistanpresidentpost #DrArifAlvi #Pakistanpresident
    அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவிகளில் ஒன்றான அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். #DonaldTrump #AdityaBamzai
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.

    இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய கோர்ட்டுகள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.



    இவர் ஏல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர்.

    இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

    இப்போது இவரை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார்.

    இந்தப் பதவியில் இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி வரை இருப்பார்.

    பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் உறுதிப்படுத்தும். அத்துடன் இந்த அமைப்பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #DonaldTrump #AdityaBamzai #tamilnews
    ×