என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nissan Motors"

    • அடுத்ததாக ஒரு C-பிரிவு SUV மாடல் வெளியாகும்.
    • நிசானின் புதிய C-SUV 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்படும்.

    நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்ற பெயரால் அறியப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு கார் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் கூட்டணியாக செயல்பட்டது. அதன்பின், சென்னையில் உள்ள ரெனால்ட் நிசான் ஆலையில் இருந்து தனது பங்குகளை விற்ற பிறகும் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டில் 2 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த நிசான் தயாராகி வருவதாக அதன் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

    முதலாவது மாடல் 7 இருக்கைகள் கொண்ட B-பிரிவு MPV ஆக இருக்கும். இது வெகுஜன மக்கள் பயன்படுத்தும் ரெனால்ட் டிரைபர் மாடலை சார்ந்ததாக இருக்கும். இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாலைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஒரு C-பிரிவு SUV மாடல் வெளியாகும். இது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

    இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிசானின் புதிய C-SUV 2026 ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் அதன் 7 இருக்கைகள் கொண்ட பதிப்பு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும். C-SUV வரிசையில் முழு எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்யவும் திட்டங்கள் உள்ளன.

    அதன் எதிர்கால இந்திய வரிசையில் டீசல் மாடல்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை நிசான் உறுதிப்படுத்தியது. ஏனெனில் B மற்றும் C பிரிவு கார்களில் டீசல் மாடல்களின் விலை வாடிக்கையாளர்கள் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். 2027 நிதியாண்டில் இந்தியாவில் 100,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யவும், இந்தியாவில் இருந்து 100,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

    ஊக்கத் தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அரசுக்கும் நிசான் நிறுவனத்துக்குமிடையே வழக்கில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. #NissanMotors #NissanDispute
    சென்னை:

    ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது. இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி நிசான் நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

    இந்நிலையில்  தமிழக அரசு ஒப்புக்கொண்டபடி ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகள் என மொத்தம் 5000 கோடி ரூபாய் பாக்கியை தராமல் இழுத்தடிப்பாக நிசான் நிறுவனம் கூறியது. இதுதொடர்பாக 2016-ம் ஆண்டு பிரதமருக்கு நிசான் நிறுவனம் நோட்டீசும் அனுப்பியது. பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், நிசான் நிறுவனம், தமிழக அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.



    இந்த வழக்கில் தற்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2008-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நிசான் நிறுவனத்துக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை 2000 கோடியை மட்டும் தமிழக அரசு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

    2019 இறுதிக்குள் 2000 கோடி ரூபாய் முழுமையாக தரப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் நிசான் நிறுவனத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என  தகவல் வெளியாகி உள்ளது. #NissanMotors #NissanDispute
    ×