என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nikki tamboli"

    • நிக்கி தம்போலி தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் அறிமுகமானார்.
    • நிக்கி தம்போலி இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்துள்ளார்.

    நிக்கி தம்போலி தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் அறிமுகமானார். இவர் 2020-ம் ஆண்டில், நடிகர் சல்மான் கான் வழங்கிய பிக் பாஸ் என்ற இந்தி நிகழ்ச்சியின் 14-வது சீசனில் பங்கேற்று 2-வது இடத்தைப் பிடித்தார்.

    28 வயதாகும் நிக்கி தம்போலி, இந்த ஆண்டு மராத்தி பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்துக் கொண்டு அங்கேயும் ரன்னர் அப்பாக வெளியேறினார். இவர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ள இவர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

    அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 5.8 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். 1.5 மில்லியன் லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றுள்ளது

    • தமிழில் காஞ்சனா-3 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி.
    • தற்போது இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி. அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3 படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்-14 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

     

    நிக்கி தம்போலி

    நிக்கி தம்போலி

    அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிக்கி தம்போலி, தற்போது பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    விநாயக் சிவா இயக்க இருக்கும் அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் 2 கதாநாயகிகளுடன் யோகி பாபு சேர்ந்து நடிக்க இருக்கிறார். #YogiBabu
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் 'அடல்ட் ஹாரர் காமெடி' ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பற்றி கூறியுள்ளார்.

    "இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்" என்கிறார் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா. 

    மேலும் கூறும்போது, "சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்" என்றார்.



    ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் 'அடல்ட் ஹாரர் காமெடி' திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.
    ×