என் மலர்
சினிமா செய்திகள்

கொள்ளை கொள்ளும் அழகு.. காஞ்சனா பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்
- நிக்கி தம்போலி தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் அறிமுகமானார்.
- நிக்கி தம்போலி இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்துள்ளார்.
நிக்கி தம்போலி தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் அறிமுகமானார். இவர் 2020-ம் ஆண்டில், நடிகர் சல்மான் கான் வழங்கிய பிக் பாஸ் என்ற இந்தி நிகழ்ச்சியின் 14-வது சீசனில் பங்கேற்று 2-வது இடத்தைப் பிடித்தார்.
28 வயதாகும் நிக்கி தம்போலி, இந்த ஆண்டு மராத்தி பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்துக் கொண்டு அங்கேயும் ரன்னர் அப்பாக வெளியேறினார். இவர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ள இவர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 5.8 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். 1.5 மில்லியன் லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றுள்ளது






