search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET merit list"

    தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான காலி இடங்களை ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள காலி இடங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. உத்தரபிரதேச மாநில தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் சங்கம் சார்பில் தாக்கலான இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா முன்னிலையில் நேற்று நடந்தது.

    அப்போது இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் கூறுகையில், “2018-19 கல்வி ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் 41.95 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன” என கூறப்பட்டது.

    மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, “இந்த காலி இடங்களை ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பலாம், பிற மாநிலங்களும் விரும்பினால் இதையே பின்பற்றுமாறு செய்யலாம்; ஆனால் வரும் 31-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டு விட வேண்டும்” என்று கூறினார்.

    இந்த யோசனையை நீதிபதிகள் ஏற்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
    ×