search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Welfare Program Officers"

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்க ளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் செனட் அரங்கில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் துணைவேந்தர் சந்திரசேகர் தேசிய மாணவர் படை போன்று நாட்டு நலப்பணித்திட்டமும், மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்க பங்களிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

    நெல்லை:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்க ளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் செனட் அரங்கில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் துணைவேந்தர் சந்திரசேகர் பேசுகையில்,தேசிய மாண வர் படை போன்று நாட்டு நலப்பணித்திட்டமும், மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்க பங்க ளிப்பது குறித்து எடுத்து ரைத்தார்.

    இதில் முன்னாள் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தாமரைக்கண்ணன், ராஜலிங்கம், ராஜரத்தினம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கவுரவித்து அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டம் பற்றிய வரலாறு, அதன் பணிகள் குறித்தும், திட்ட அலுவலர்கள் அதனை எவ்வாறு சிறப்பாக செய்வது உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.

    மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் செந்தில்குமார் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் குறித்து பேசினார். முன்ன தாக லெனின் வரவேற்றார்.

    கருத்தரங்கில் தேசிய மற்றும் மாநில அளவிலான முகாம்கள் மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை பாராட்டி துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதில் பல்கலைகழ கத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் 180 நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாசுகி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் செய்திருந்தார்.

    ×