search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "narayananthirupathi"

    • படுகொலை செய்வதை வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிந்தது கொடூர செயல்.
    • மதத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலை செய்யம் உரிமை யாருக்கும் இல்லை.

    பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    ராஜஸ்தானில் கன்ஹையாலால் என்ற தையற்காரர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துணி தைக்க அளவு கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தையற்கடைக்குள் சென்ற ரியாஸ் மற்றும் முகமது என்ற இரு நபர்கள் கன்ஹையா லாலை கடைக்குள்ளே வெட்டி படுகொலை செய்வதை அவர்களே வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிந்ததும் உள்ளது கொடூர செயல்.

    கன்ஹையாலால் நுபூர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு செய்ததை அடுத்து இந்த படுகொலை நடைபெற்றுள்ளது. கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டாலும், ஏற்கனவே பல மிரட்டல்கள் விடப்பட்டிருந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு கன்ஹையாலாலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறியது. கொடூரமான இந்த கொலைச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    மதத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலை செய்யம் உரிமை யாருக்கும் இல்லை. காட்டுமிராண்டித்தனமான இந்த கொடூர செயலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதோடு மதத்தின் பெயரால் நடைபெறும் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×