search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nail sticker design"

    தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.
    நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.

    நகங்களின் நுனிப்பகுதியில் பலவிதமான வண்ணங்களில் பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்யலாம். நெயில் ஆர்ட் செய்வதற்கு விசேஷமான நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில், சாதாரண நெயில் பாலிஷ் மீது ஓவியங்கள் வரைவதோ அலங்கார வேலைப்பாடுகள் செய்வதோ கடினமானது. தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் நிரந்தரமானது. ஜெல் பூசிய நகங்களை ‘யு.வி” லைட் எனப்படும் ஊதாக் கதிர்களின் கீழ் வைக்கின்றார்கள். பளபளப்பான கண்களைக் கவரும் தோற்றத்தால் பார்ப்போரை கவரச் செய்யலாம்.

    ஸ்டிக்கர் டிசைன் நெயில் ஆர்ட்டுகள் அவசரத்துக்கு பயன்படுத்தப்படுவது. இரண்டே நிமிடங்களில் நகங்களை அழகாக்கிக் கொள்ளலாம். பல வடிவங்கள் கொண்ட நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்கள் எளிதாகக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். திடீரென விருந்து வைபவங்களுக்கு அழைப்பு வந்தால் உடனுக்குடன் உங்கள் கைவிரல்களின் அழகை மெருகுபடுத்துவதற்குக் கைக்கொடுக்கக் கூடியவை இந்த நெயில் ஸ்டிக்கர்ஸ். முன் கூட்டியே இவற்றை வாங்கி வைத்திருந்தால் இரண்டே நிமிடத்தில் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தயாராகி விடலாம்.

    நகங்களும் ஒரு அட்ராக்டிவ் ஆன உறுப்பு தான். வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் சிவப்பு, மெரூன், கருப்பு நிறங்களில் நகப்பூச்சுகள் பயன்படுத்தினால்
    அவ்வளவு அழகாக இருக்கும். நாம் அணியும் உடைநிறத்துக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டுகள் இருந்தால் சொல்லவே வேண்டாம் உங்கள் முகத்தைக்காட்டிலும்
    நகங்கள் அட்ராக்டிவ் ஆகத்தெரியும். கருப்பு அல்லது மாநிறத்தில் இருப்பவர்களும் நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ளலாம். 
    ×