search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naan Muthalvan'"

    • “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச அளவிலான மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    மேற்படி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க https://naanmudhalvan.tn.gov.in/tnskills/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.விண்ணப்பதாரர்கள் கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில குழுவாக பங்குபெறும் சில தொழில் பிரிவுகளுக்கு கடந்த 1999 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தொழில் பழகுநர்கள் பயிற்சி முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

    இப்போட்டிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். திறன் ேபாட்டிக்கு பதிவு செய்திட ஜூலை 7-ந் தேதி கடைசி என்பதால் மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலஅளவிலான திறன் போட்டிக்கும் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவிலும்,இந்திய அளவில் வென்றவர்கள் சர்வதேச அளவிலான திறன் போட்டிக்கும் பங்கு பெறலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0421-2250500, 94990 55695,94434 71184. https://naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது கீ QR Code- மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பங்கேற்கலாம்.
    • பயிற்சியின்போது ரூ. 10ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    அவினாசி:

    அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்ட கலந்தாய்வு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் எஸ்.பாலசுப்ரமணியன், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பயிற்றுநா் பாலசுப்ரமணியன் ஆகியோா் பயிற்சியளித்தனா். பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 100 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சியின்போது ரூ. 10ஆயிரம் நிதியுதவி, பயிற்சி முடித்த பிறகு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு, பயிற்சிக்கான தொகையை அரசே ஏற்பது, தற்போது பயிலும் கல்விக்கு இடையூறு இல்லாமல் பயிற்சியை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.நான் முதல்வன் திட்டத்தின் ஆசிரியப் பொறுப்பாளா் போ.மணிவண்ணன் ஒருங்கிணைத்தாா்.முடிவில் தமிழ்ப் பேராசிரியா் புனிதராணி நன்றி கூறினாா்.

    ×