என் மலர்
நீங்கள் தேடியது "Mysore-Kannur"
- மதுரை - கோவை இடையே பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- மணிக்கு 100 கி.மீ., வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது.
திருப்பூர் :
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மைசூரு - கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 30-ந் தேதி, 1-ந் தேதி ஆகிய நாட்களில் மைசூருவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மாலை 5.15 மணிக்கு கண்ணூருக்கு சென்று சேரும். இந்த ரெயில் சேலத்துக்கு காலை 7.55 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.50 மணிக்கம், திருப்பூருக்கு 9.45 மணிக்கும், கோவைக்கு 10.45 மணிக்கும் சென்றடையும்.
இதுபோல் கண்ணூர்-மைசூர் சிறப்பு ரெயில் வருகிற 31-ந் தேதி, 2-ந் தேதி ஆகிய நாட்களில் கண்ணூரில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 2.30 மணிக்கு சென்று சேரும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 2.20 மணிக்கும், திருப்பூருக்கு 3.05 மணிக்கும், ஈரோட்டுக்கு 4.15 மணிக்கும், சேலத்துக்கு 5.20 மணிக்கும் சென்றடையும். இந்த தகவலை சேலம் கேட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் - பழனி தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மதுரை - கோவை இடையே பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், திண்டுக்கல் - பழனி, பழனி - பொள்ளாச்சி தடத்தில் ெரயில்கள் வேகமாக செல்லும் வகையில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தடத்தில் இனி மணிக்கு 100 கி.மீ., வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் மதுரை - கோவை இடையே இரு மார்க்க விரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. அதாவது மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் பகல் 12:15 மணிக்கே கோவை சென்று விடும்.
அதேபோல் கோவையில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில்இரவு 7:35 மணிக்கு மதுரை செல்லும். இதற்கு முந்தைய பயண நேரத்தை ஒப்பிடுகையில் 30 நிமிடம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






