search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MPCA"

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது போட்டி டிக்கெட் பிரச்சனையால் மாற்றப்பட வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. #INDvWI #BCCI
    மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    இதில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 24-ந்தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிசிசிஐ-யின் புது அரசியலமைப்பு விதிப்படி ஒரு மைதானத்தில் இருக்கும் மொத்த டிக்கெட்டில் 90 சதவீத டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்க அளிக்கப்பட வேண்டும். 10 சதவீதம்தாம் கிரிக்கெட் சங்கத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

    இந்த டிக்கெட்டை வைத்துதான் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஸ்பான்சர் மற்றும் உயர்அதிகாரிகள் போன்றவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும். ஹோல்கர் மைதானத்தில் 27 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இதில் 10 சதவீதமான 2700 டிக்கெட்டுக்கள் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஒதுக்கப்படும்.



    இந்நிலையில் பிசிசிஐ முக்கிய பிரமுகர்களுக்கு என 5 சதவீத டிக்கெட்டுக்களை கேட்கிறது. இதற்கு மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் உடன்படவில்லை. பிசிசிஐ தனது முடிவை மாற்றாவிடில் போட்டியை நடத்த முடியாது என்பதில் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் உறுதியாக உள்ளது. இதனால் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
    ×