search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorists suffering"

    மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மாமல்லபுரம்:

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த படி பெய்யவில்லை. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், மாமல்லபுரம்-கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை கடலோரப் பகுதிகளான கோவளம், வட நெம்மேலி, தேவநேரி, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், கூவத்தூர், காத்தாங்கடை, வடபட்டிணம், பாண்டூர், முகையூர், தென்பட்டினம், அடையாளச்சேரி, நடுக்குப்பம் போன்ற பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.

    சாலைகளில் பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மார்கழிக்கு முன்னரே கடும் பனிப்பொழிவு துவங்கி விட்டது. எனவே மார்கழி மாதம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என இந்த பகுதி மீனவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

    காரிமங்கலம் பகுதியில் குண்டும் - குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்து பைசுஅள்ளியில் இருந்து பூமாண்ட அள்ளி மோதூர் செல்லும் பிரதான சாலை பாலிடெக்னிக் கல்லூரி, பூமாண்டஅள்ளி, கோவிலூர், புலிக்கரை, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் சுமார் 3 கி.மீட்டர் தொலைவிற்கு ஜல்லி, கற்கள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 

    எனவே, பொதுமக்களின் நலன்கருதி பழுதடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×