search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mosquito spraying"

    • கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பருவ மழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என நாளொன்றுக்கு இரு வேளையிலும் மாநகராட்சி பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சென்று ராட்சத மருந்து தெளிக்கும் எந்திரம் மூலம் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று மாஸ் கிளினிக் என்ற பெயரில் மாநகர் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×