search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkey Box Virus"

    இங்கிலாந்தில் 190 பேரும், ஸ்பெயினில் 142 பேரும், போர்ச்சுக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் குரங்கு அம்மை நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
    ஜெனீவா :

    உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரையிலான நிலவரம் ஆகும்.

    இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, "உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு அம்மை பரவி உள்ளது. இங்கிலாந்தில் 190 பேரும், ஸ்பெயினில் 142 பேரும், போர்ச்சுக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, "தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும். வைரஸ் மரபணுவை ஆய்வுசெய்து, வாய்ப்பு உள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதை வரிசைப்படுத்த வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
    பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.
    பாரீஸ்

    உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது.

    உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறுகிறது. இது தொடர்பாக பிரெஞ்சு சுகாதார அமைப்பு கூறும்போது, இதுபோன்ற நோய்த்தொற்றை எதிர்பார்க்கவில்லை என்றும் நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் கூறியது.

    மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.
    இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி :

    குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளது.

    உலகம் முழுவதும் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு அம்மை பாதித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை இப்போதே பெருந்தொற்றாக அறிவிக்க முடியாது என்றபோதிலும், இந்நோய் அதிகமாக பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும். மேற்கொண்டு பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்.

    குரங்கு அம்மை என சந்தேகத்துக்குரிய மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, உறுதி செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.

    நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முழு கவச உடை அணிய வேண்டும். அதுபோல், குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை எல்லா ஆஸ்பத்திரிகளும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்...கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்
    கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு தற்போதுதான் உலகம் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில், குரங்கு காய்ச்சல் மீண்டும் கொரோனா போன்று பெருந்தொற்றாக பரவி விடுமோ என பரவலாக அச்சத்தை எழுப்பியுள்ளது.
    உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம்.

    காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும். மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    சுவீடனில் இந்த தொற்று பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இந்த நோய் ஆபத்தான நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கு வழிவகுக்கும் என்று அந்த நாட்டின் சுகாதார மந்திரி லேனா ஹாலன்கிரென் தெரிவித்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குரங்கு காய்ச்சல் கவலைக்குரிய ஒன்றுதான் என்று தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு தற்போதுதான் உலகம் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில், குரங்கு காய்ச்சல் மீண்டும் கொரோனா போன்று பெருந்தொற்றாக பரவி விடுமோ என பரவலாக அச்சத்தை எழுப்பியுள்ளது.

    ஆனால், நிச்சயமாக கொரோனா பெருந்தொற்று போல் குரங்கு காய்ச்சல் பரவல் இருக்காது என்று அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிபுணர் வெளியிட்டு இருக்கும் தகவல், மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.

    அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவரும் முன்னணி மருத்துவ நிபுணருமான பஹீம் யூனுஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி விரிவாக பதிலளித்துள்ளார்.

    அவர் கூறும் போது, குரங்கு காய்ச்சல் பாதிப்பு கவலைக்குரியது என்றாலும், கொரோனா போன்று பெருந்தொற்றாக பரவும் வாய்ப்பு முற்றிலும் இல்லை. ஏனென்றால், இது நாவல் வகையை சேர்ந்தது கிடையாது. பொதுவாக இது ஆபத்தானது கிடையாது. கொரோனாவை விட இது சற்றும் தீவிரம் குறைந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது உள்ளது. சின்னம்மைக்கு போடப்படும் தடுப்பூசி மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்" எனத்தெரிவித்துள்ளார்.

    இதையும் படிக்கலாம்...அமெரிக்காவில் பயங்கரம் - தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலி
    ×