search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs meeting"

    • அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 22ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
    • கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்

    சென்னை:

    சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார்.

    22ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபை கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. #TNAssembly #DMKMLAs
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வருகிற 29-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.



    இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மே 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. சார்பில் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

    தமிழகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இந்த கூட்டத் தொடரில் தி.மு.க. பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNAssembly #DMKMLAs

    ×