என் மலர்

  நீங்கள் தேடியது "mission shakthi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ’மிஷன் சக்தி’ சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி இன்று தனது உரையில் தெரிவித்ததில் நடத்தை விதிமீறல் உள்ளதா? என்பதை விசாரிக்க தனிக்குழுவை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. #ECItoexamine #Modi #missionshakthi #Modionmissionshakti
  புதுடெல்லி:

  நாட்டு மக்களுக்கு மிக முக்கிய உரையாற்றப் போவதாக தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தனது உரையில் இன்று அறிவித்தார். 

  இதை விண்வெளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் கொண்டாடிவரும் அதேவேளையில், எதிர்க்கட்சி தலைவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி  உள்ளிட்ட கட்சிகளும் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்பை ஒரு பிரதமர் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். எனவே இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

  இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்றிரவு தெரிவித்துள்ளது. #ECItoexamine #Modi #missionshakthi  #Modionmissionshakti
  ×