என் மலர்

  நீங்கள் தேடியது "Missing old man"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், நாயக்கர் வீதியை சேர்ந்தவர் சின்னகத்தி(56). இவரது மனைவி மீனாட்சி (50). இந்நிலையில் சின்ன கத்தி கடந்த 2 வருடமாக கால் வலியால் அவதி அடைந்து வந்துள்ளார்.

  இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை என கூறப்படுகிறது.

  கால் வலி காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்து உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூறி வந்துள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

  இந்நிலையில் கடந்த 13-ந் தேதி மீனாட்சி கணவரிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சின்னகத்தி மட்டும் இருந்தார்.

  மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

  இந்நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்தபோது நீரில் மூழ்கி இறந்தது தனது கணவர் சின்ன கத்தி என்பது தெரிய வந்தது.

  இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சின்னகத்தி ஆற்றில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ×