search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing case"

    • வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
    • தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள சாலைமறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தவக்கண்ணன். டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

    கடந்த 2020 மார்ச் 20-ந்தேதி பாஸ்போர்ட் விசாரணைக்காக அ.முக்குளம் போலீசார் அழைத்ததன் பேரில் தவக்கண்ணன் தனது நண்பருடன் 21-ந் தேதி காலை அ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு விசாரணை சரிபார்ப்பு முடிந்த நிலையில் வீடு திரும்பினார்.

    இதற்கிடையில் அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தனது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வாக்கி-டாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு போலீசார் குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அங்கிருந்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ.மணிகண்டன் திரும்பியுள்ளார்.

    அப்போது திடீரென அவரது வாக்கி-டாக்கி காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் கடைசியாக போலீஸ் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்து விட்டு திரும்பிய தவக்கண்ணனை தொடர்பு கொண்டு தனது வாக்கி-டாக்கி காணாமல் போனதாகவும் அதனை நீ திருடியதாகவும் அது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் பதிவாகிய சி.சி.டி.வி. பதிவுக்காட்சிகள் ஆதாரமாக இருப்பதாகவும் கூறி விசாரணைக்காக போலீஸ் வருமாறு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அழைத்துள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்ற தவக்கண்ணனை எஸ்.ஐ. உள்பட போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையே தொலைந்து போனதாக கூறப்படும் வாக்கி டாக்கி கிடைத்து விட்ட நிலையிலும் தவக்கண்ணனை விடுவிக்காமல் வாக்கி-டாக்கியை திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் வாக்கி-டாக்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அ.முக்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தவக்கண்ணன் குடிபோதையில் பொது இடத் தில் ஆபாசமாக பேசியதாகவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் தவக்கண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் தவக்கண்ணன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கில் வாதிட்டனர்.

    தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரியான தவக்கண்ணனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து திருச்சுழி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அபர்ணா நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

    குழந்தைகள் கடத்தப்பட்டால் மாயம் என்று வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
    சென்னை:

    குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாயமானதாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறினர்.



    நீதிபதிகள் வழங்கிய உத்தரவை அரசு வக்கீல் ஆர்.ரவிச்சந்திரன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அலுவல் ரீதியாக தெரிவித்தார். இதையடுத்து டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அதில் அவர், ‘குழந்தைகள் மாயமானதாக புகார்கள் கொடுக்கும்போது, நேரடியாக கடத்தல் புகார் கொடுக்கப்பட்டாலும் போலீசார் வழக்கமாக காணவில்லை என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். இனிமேல் காணாமல் போன சம்பவங்களின்போது நேரடி கடத்தல் புகார்கள் பெறப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 363 அல்லது 366 (ஏ) பிரிவுகளின் கீழ் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளார். 
    ×