என் மலர்
நீங்கள் தேடியது "minor woman kidnapped"
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த 15 வயது மைனர் பெண் போடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்தது.
வத்தலக்குண்டு பகுதியில் பஸ் வந்த போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மைனர் பெண்ணிடம் நைசாக பேசினர். இதில் மயங்கிய அந்த பெண்ணை அவர்கள் கடத்தி சென்றனர். உறவினர் வீட்டுக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்த போது அந்த பெண்ணை செங்கோட்டையை சேர்ந்த இளங்கோவன், கார்த்திக், குமரேசன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது.
இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தி சென்ற மைனர் பெண் மற்றும் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.






