என் மலர்

  நீங்கள் தேடியது "minor girl enjoy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  நிலக்கோட்டை:

  திண்டுக்கல் அருகில் உள்ள தோப்புபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் வேல்முருகன் (வயது22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பழகி வந்தார். அவரை காதலிப்பதாக கூறி கடந்த 4.3.2019-ம் தேதியன்று கடத்தி சென்றார்.

  பின்னர் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் செய்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தார். தனது மகளை காணாமல் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே திருமணமான ஒரு மாதத்திலேயே உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என கூறி விட்டு அவரை பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாழ்க்கையை சீரழித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

  இது குறித்து விசாரணை நடத்துமாறு நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் - கரூர் சாலை எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் புவனா (வயது 16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் கனகபாண்டி (24). இவர் டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார்.

  இருவரும் கடந்த சில நாட்களாக பேசி பழகி வந்துள்ளனர். கனகபாண்டி காதலிப்பதாக புவனாவிடம் கூறி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த புவனாவை தனது வேனில் ஏற்றி தனியார் கல்லூரி அருகே அழைத்துச் சென்றார்.

  ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். அதன் பின்னர் வீட்டுக்கு போக வேண்டும் என புவனா கூறவே சிறிது நேரம் கழித்து தானே கொண்டு போய் விடுவதாக கூறியுள்ளார்.

  அப்போது மழை பெய்யவே அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் புவனாவிடம் ஆசை வார்த்தை பேசியபடியே கனகபாண்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

  வேலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அதிகாலையில் புவனாவை தனது நண்பரான சீனிவாச நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (18) என்பவரை வரவழைத்து அவரது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விடுமாறு கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் புவனாவை அழைத்துச் சென்ற ஸ்டீபன் ராஜ் பாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் அவரை விட்டுச் சென்று விட்டார். உடல் சோர்வாக காணப்பட்ட புவனாவை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் நடந்த விபரங்களை கூறியுள்ளார். 

  இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மும்தாஜ்மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை கற்பழித்த கனகபாண்டியையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன் ராஜையும் கைது செய்தனர்.

  கனகபாண்டி மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  ×