search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anbil Mahesh's false speech"

    • மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
    • இடைநிற்றல் கல்வியை போக்க உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைநிற்றல் கல்வியை போக்க உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது. மேலும் தமிழக முதல்-அமைச்சரின் கனவு வகுப்பறையில் மாணவர்கள் பாடம் கற்றால் மட்டும் போதாது சுற்றுச்சூழல் தொடர்பாகவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். நீரியியல் மேலாண்மையில் உலகத்திற்கு தமிழகம் முன்னிலையாக உள்ளது.

    ஏரி குளங்கள் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தமிழகத்தின் உயிர் ஆதாரமாக உள்ளது. இதனை பாதுகாக்க பள்ளியிலிருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இதற்கு முன்னதாக இயற்கைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் நீர் மேலாண்மை குறித்து மாணவர்களிடையே எடுத்துப் பேச வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் (எ) சிவகுமார் நன்றி கூறினார். 

    ×