search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mini sports"

    • மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று திருப்புல்லாணி கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
    • மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் 7-வது வார்டு கவுன்சிலர் பெரியபட்டினம் பைரோஸ்கான். இவர் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இந்த வார்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்புல்லாணி யூனியன் 7-வது வார்டில் அதிக மக்கள் வசிக்க கூடிய பெரிய பட்டினம், குருத்த மண்குண்டு, தெற்கு புதுக்குடியிருப்பு, பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும். மாவட்ட தி.மு.க. செயலாளரும்,

    எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவியுடன் இணைந்து இந்த பகுதியில் பல வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.

    யூனியன் கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட ஹமீதியா நகர் பகுதிக்கு புதிய பாதையில் பைப்லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆலிம் நகர், அம்மன் கோவில் கிழக்கு பகுதி, வடக்குத்தெரு சிறுசிலவு கோவில் பகுதி, தெற்கு புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி, ஜலால் ஜமால் ஜும்ஆ பள்ளி மையவாடி, பிலால் நகர் ஆகிய பகுகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    நடுத்தெரு மற்றும் ஜலாலியா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை பூமிக்குள் செலுத்தும் விதமாக உறிஞ்சு குழி அமைக்கப் பட்டுள்ளது. தாமரை குண்டு ஊரணியில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தெற்கு புதுகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் அடிக்கும் வேலை நடை பெற்று வருகிறது.

    எனது தொடர் கோரிக்கையை ஏற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி கப்பலாறு, மொர வாய்க்கால் பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு ளது. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து கலெக்டர் பரிந்துரை யின்பேரில் 70 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்த குருத்த மண்குண்டு கிராமத்திற்கு இடம் தேர்வு செய்து புதிய தார்சாலை அமைக்க அரசு அனுமதி அளித்து தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மங்கம்மாபுரம் சாலையில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குத்தெருவில் புதிய கிராவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பஸ் நிலையம் அருகே இருந்த அங்கன்வாடி இடமாற்றம் செய்யப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.பெரிய பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துக்கல்வலசை வரை உள்ள சாலையை பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் இணைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவிகள் அதிகமாக இருப்பதால் 15-வது மானிய நிதியில் புதிய கழிவறை கட்டப்பட உள்ளது. எனது வேண்டுகோளினை ஏற்று கீழ்க்கண்ட பணிகளை நிறைவேற்றித்தர காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளியில் இருந்து முத்துப் பேட்டை கடற்கரை வரை தார்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. காயிதேமில்லத் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, ஆலிம் நகர், பிலால் நகர் பகுதி மற்றும் கரிச்சான்குண்டு பகுதிகளை உள்ளடக்கிய காயிதே மில்லத் நகர் பகுதியில் புதிய பகுதி நேர ரேசன் கடை அமைக்கப் பட்டுள்ளது.

    காயிதே மில்லத் நகர் பகுதிக்கு புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. பிலால் நகர், தெற்குதெரு பகுதிகளில் குறைந்தழுத்த மின்சார் கிடைப்பதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியபட்டினம் ஊராட்சி பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கையா நகர் பகுதியில் அமைந்துள்ள மோசமான அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பப்பட்டு வருகிறது. இவை தவிர எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

    தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நவாஸ்கனி எம்.பி.நிதியில் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி அருகில் ஹைமாஸ் விளக்கு, பஸ் நிலையத்தில் புதிய நிழற்குடை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ. பரிந்து ரையின்பேரில் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் நிதியில் பொது மயானத்திற்கு பகுதி அளவு சுற்றுசுவர் கட்டப்பட்டது. பெரியபட்டினம் ஊராட்சியில் 77 ஏக்கர் பரப்பளவில் உள்ள கப்பலாறு பகுதி மற்றும் 2,200 மீட்டர் தூரமுள்ள மொரவாய்கால் ஒடை ஆகிய 2 நீர்பிடிப்பு பகுதிகளையும் தூர்வாரி மழைநீரை சேமித்து இப்பகுதி நிலத்தடி நீரை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் கூடுத லாக டாக்டர் நியமிக்க வேண்டும்.

    பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுதேர்வு மையம் அமைக்க வேண்டும், குருத்தமண்குண்டு மற்றும் தெற்கு புதுகுடியிருப்பு பகுதி பொது மயானத்திற்கு மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீருக்குள் செல்ல வேண்டியதாக இருப்பதால் அங்கு பாலத்துடன் கூடிய கிராவல் சாலை அமைத்து தரவேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×