search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Century Ceramony"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 30 கைதிகள் விடுதலையானார்கள். #MGRcentenaryfunction

    மதுரை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 10 வருடத்துக்கும் மேலாக சிறையிலிருக்கும் 1,763 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அவர்கள் படிப்படியாக விடுதலையாகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 30 கைதிகள் விடுதலையானார்கள். அவர்களை உறவினர்கள் வரவேற்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 10வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 1,763 கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில் பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 450 சிறைவாசிகள் தான் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது.

    எனவே தமிழக அரசு 10 வருடத்திற்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    தகுதி இருந்தும் விடுதலை செய்யப்படாமல் இருக்கும் சிறைவாசிகள் சிறைக்குள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    செங்குன்றம்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி முதல் கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக புழல் ஜெயிலில் 52 கைதிகள் மற்ற ஜெயிலில் இருந்து 16 கைதிகள் என மொத்தம் 68 பேரும், 3-வது கட்டமாக 47 கைதிகளும், 4-வது கட்டமாக 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் அறிவுரைகள் கூறி வழி அனுப்பி வைத்தார். விடுதலையான கைதிகளை உறவினர்கள் ஜெயில் வாசலில் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை 207 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    ×