search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant Association"

    • விழாவில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
    • முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வணிகர் சங்க 23-வது ஆண்டுவிழா ஜோதி மஹாலில் நடந்தது. சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் பாபு செல்வன் வரவேற்றார். தொழி லதிபர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சங்க நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் கிருஷ்ணராஜ், ரஞ்சன், மாமல்லன், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நாசரேத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகாவாக உருவாக்க அரசை கேட்பது, வணிகர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடை யாள அட்டை வழங்குவது, நாசரேத் ரெயில் நிலை யத்தை பொது மக்களின் நலம் கருதி விரிவுப்படுத்தி எஸ்கலேட்டரை விரைவில் அமைக்க ெரயில்வே நிர்வாகத்தை கேட்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து 2023- 2024-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஜெபஸ் திலகராஜ் தலைவராகவும், ஆறுமுகம் துணை தலைவராகவும், செல்வன் செயலாளராகவும், சித்திக் துணை செயலாளராகவும், அகிலன் பொரு ளாளராகவும், நோவா சாலமோன், ஜெபராஜ், செல்வாஸ் ஆகியோர் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச மருத்துவ பரிசோ தனை முகாம், மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் தலை மையில் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசுவா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ் மற்றும் குழுவினர் வணிகர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் செல்வன் நன்றி கூறினார்.

    ×