search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorization"

    • வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத எந்த படிப்பும் வாழ்வதற்கு ஒரு முழுமையை தராது.
    • பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.

    எப்படி படிக்க வேண்டும்? படிப்பதை எப்படி மறக்காமல் இருப்பது, படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    படிப்பதை நாம் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது அதை வைத்து உயர்ந்த இடத்துக்கு சென்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவோ இருக்க கூடாது. வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத எந்த படிப்பும் வாழ்வதற்கு ஒரு முழுமையை தராது.

    ஒரு ஆறு வயது குழந்தைக்கு நீங்கள் படித்த விஷயத்தை புரிய வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கே அதைப்பற்றிய புரிதல் இல்லை என்பதுதான் உண்மை. படித்ததை நியாபகம் வைத்துக்கொள்வதற்கு ஒரு சில கோட்பாடுகளை நாம் பார்க்கலாம்.

    படிக்கும்போது குழந்தைகள் படித்ததை அப்படியே மனப்பாடம் செய்து படித்தோம் என்றால் வெறும் வார்த்தைகளை மட்டுமே நாம் புரிந்து வைத்திருப்போம். இதனால் அந்த பாடத்தில் உள்ள வார்த்தைகளை சீக்கிரமே மறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.

    இரண்டாவதாக குழந்தைகளுக்கு புரியும் மொழிகளில் நாம் கற்ற பாடங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பாடத்தை அவர்களுக்கு தெரிந்த தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிகளில் புரியும் அளவுக்கு அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் புரிந்து படிப்பதற்கும், படித்ததை அவர்கள் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். படித்ததை அவர்களுக்கு எளிதாக புரியும் அளவுக்கு உதாரணங்களை கூறி சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    உதாரணத்திற்கு அவர்கள் விரும்புகிற காற்றுன் திரைப்படங்கள், விளையாட்டுகளை கூறி அதனை விளக்க வேண்டும். அப்போது இன்னும் ஆர்வமாக படிப்பதற்கு வழிவகுக்கும்.

    மூன்றாவதாக குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்தும் படித்த விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். அதாவது படித்த பாடங்களை புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா? பிடிக்கவில்லையா? சூழ்நிலை சரியாக இல்லையா? ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கிறார்களா? என்பன போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவது மற்றும் இன்னும் தெளிவாக அவர்களுக்கு புரிய வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    இப்போது நம்மகிட்ட இன்டர்நெட் இருக்கிறது. எக்கச்சக்கமான கம்யூனிகேஷன் சேனல்கள் உள்ளது. ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்கு நிறையபேர் இருக்கிறார்கள். எனவே எந்த விஷயத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதன் மூலம் அல்லது அவர்கள் மூலம் கற்றுக்கொள்ள இன்று வாய்ப்புகள் நிறைய வந்துவிட்டன.

    கடைசியாக குழந்தைகள் படித்ததை தெரிந்துகொண்டபிறகும் சிலருக்கு அது படிக்கும்போது மட்டுமே நினைவில் இருக்கிறது. ஆனால் அது 3 மாதங்கள் கழித்து கேட்டால் நினைவில் இருப்பதில்லை என்றால் இன்னும் பயிற்சி அவசியம். அதாவது படித்த பாடத்தை குழந்தைகள் எவ்வாறு பயின்றார்களோ அதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு குழந்தைகள் கற்றுக்கொண்ட பாடத்தை அவர்களுடைய நண்பர்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ முதலில் சொல்லித்தர பழக்க வேண்டும்.

    குழந்தைகள் பள்ளியில் தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை வீட்டிற்கு வந்ததும். ஆசிரியர் நடத்திய பாடங்களை பெற்றோருக்கு புரியும்படியாக எடுத்துக்கூற வேண்டும். இதில் பெற்றோர்கள் தவறு ஏதும் இருந்தால் திருத்திக்கொள்ளலாம். இன்னும் எளிமையாக கற்கும் அளவிற்கு அவர்களுகு சொல்லிக் கொடுக்கலாம். அவ்வாறு குழந்தைகளை நாம் பழக்கினால் தான் குழந்தைகளுக்கு அவர்கள் படித்த பாடங்கள் எத்தைனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் இருக்கும்.

    சரி இவ்வாறு செய்வதற்கு நிறைய நேரம் எடுக்குமா? என்றால், நாம் நினைப்பதைவிட குறைந்த அளவு நேரமே தேவைப்படும். நாம் ஒரு பாடத்தை 10 தடவைக்கு மேல் படிப்பதை விட இரண்டு, மூன்று தடவை படிக்கும் போதே அவர்களுக்கு புரியும்படி கற்றுக்கொடுத்துவிட்டால் நன்றாக அவர்களுக்கு பதிந்துவிடும்.

    யோசித்துபாருங்கள் ஒரு பாடத்தை குழந்தைகள் மாதத்தேர்வுக்கும் படிப்பார்கள். அதையே காலாண்டு தேர்வுக்கும் படிப்பார்கள், அரையாண்டு, முழுபரிட்சை தேர்வுக்கும் படிப்பார்கள். நாம் முதல் தடவை படிக்கும் போதே ஒரு பாடத்தை புரிந்து படித்துவிட்டால் நாம் அந்த பாடத்தை எப்போது கேட்டாலும் சொல்லும் அளவுக்கு அவர்கள் கைதேர்ந்தவர்களாகிவிடுவார்கள்.

    இதேபோல் ஒரு பாடத்தை புரிந்து படித்து, படித்த பாடத்தை வழிமுறைப்படுத்தி, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். எனவே உங்கள் குழந்தைகளும் இதே வழிமுறையை பின்பற்றி படிக்க கற்றுக்கொடுங்கள். படித்தவை அனைத்தும் மனதில் இருந்து மறக்காமல் அதிக நினைவாற்றலுடன் விளங்கவும் உதவியாக இருக்கும்.

    • சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுமி தக்ஷன்யாஸ்ரீ திருக்குறளில் 1330 குறளில் 1000 குறள்களை மனப்பாடம் செய்துள்ளார்.
    • சிறுமியின் சாதனை கலாம் உலக சாதனைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் நாகலட்சுமியின் மகள் தக்ஷன்யாஸ்ரீ (வயது 9). இவர்

    5-ம் வகுப்பு படித்து வருகிறார். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுமி தக்ஷன்யாஸ்ரீ திருக்குறளில் 1330 குறளில் 1000 குறல்களை மனப்பாடம் செய்துள்ளார். மேலும் மீதமுள்ள 330 குறளையும் மனப்பாடம் செய்ய படித்து வருகிறார்.

    இந்நிலையில் இவர் திருக்குறளில் 133 அதிகாரப் பெயர்களை குறைந்த நேரத்தில் அதாவது 70 வினாடிகளில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதனால் சிறுமியின் சாதனை கலாம் உலக சாதனைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதனை படைத்த தக்ஷன்யாஸ்ரீயை பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×