search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melur Railway Station"

    • பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரெயில்வே நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கோரிக்கைகளை உடனே செய்து தருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்னக ரெயில்வே மூலம் மேலூர் ரெயில் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே ரூ. 12 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் மேலூர் ரெயில் நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தெற்கு ரெயில்வே அலுவலரிடம் உழவர்சந்தை முன்பும், புதிய பஸ் நிலை யம் முன்பும் படிக்கட்டுகள் அமைத்திடவும், தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைத்திடவும், மேலும் 2 பிளாட் பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரெயில்வே நடைமேம்பாலம் அமைத்திடவும் கோரிக்கை வைத்தார்.

    அதனை உடனே செய்து தருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், தெற்கு பகுதியில் கே.வி.கே. நகர் உள்ள கீழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்கு சாலைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ஆய்வின் போது ரெயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் ஜீவன்ஜேக்கப், அல்பட், தூத்துக்குடி ரெயில்வே மேலாளர், பொறியாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
    • டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள மேலூர் ரெயில் நிலையத்தை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் ஆய்வு

    ரெயில் நிலையத்திற்கு எதிரே புதிய பஸ் நிலையம் இருப்பதால் சாலையை அகலப்படுத்துவதற்கும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ரெயில்வே பணிகள் நிறைவேற்றதால் அப்பகுதியில் இருக்கும் மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றி போக்குவதற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் புதிய சாலை மற்றும் மின்விளக்குகள் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அங்கே உள்ள நடைபாதை பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகளுக்கு உத்தரவு

    இதனை அடுத்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர், தி.மு.க. வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×