என் மலர்

  நீங்கள் தேடியது "Mega rally"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவரும் எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தை கேலி செய்த பா.ஜ.க. இந்தியாவை அழிக்க கோமாளிகளும் பொய்யர்களும் திரண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. #MamataBanerjee #Megarally #BJPleaders
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.  அவர்களின் பேச்சு வெவ்வேறு தலைப்புகளில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு கணைகளும் பாயத் தொடங்கியுள்ளது.

  இந்த பொதுக்கூட்டத்தை கேலி செய்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் முகுல் ராய், ‘ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்காளம் மாநிலம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது.

  மறுபடியும் இந்தியாவை அழிக்க பல்வேறு கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களான கலைஞர்களும் ஒன்றுசேர்ந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

  இதேபோல், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்கறை படிந்த தலைவர்கள் அனைவரும்  மோடிக்கு எதிராக போரிட ஒன்று திரண்டுள்ளனர். இந்த ஊழல்வாதி கும்பலை எதிர்த்தும் தேசவிரோதிகளுக்கு எதிராகவும் நடைபெறும் போரில் மோடியின் பின்னால் இந்த நாட்டு மக்கள் உறுதியாக துணைநிற்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

  மத்திய இணை மந்திரி பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்வாதிகள் அனைவரும் மம்தாவுடன் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இவர்களை தனித்தனியாக பெயர்களை குறிப்பிட்டு கூற வேண்டியதில்லை. நீங்களே அந்த ஊழல் கறைபடிந்த முகங்களின் எண்ணிக்கையை பார்த்துக் கணக்கிட்டுக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #Megarally #BJPleaders
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். #MamataBanerjee #Megarally
  கொல்கத்தா:

  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

  இந்நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  

  இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  நேற்றே பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இன்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

  தலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #MamataBanerjee  #Megarally
  ×