search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medicinal Properties of Melon"

    • பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
    • பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.

    பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.

    உலகின் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றான `யுபாரி கிங் முலாம் பழம்' பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இதன் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.

    யுபாரி கிங் முலாம் பழம், ஜப்பானின் `யுபாரி' பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. இதனால்தான் இப்பெயர் பெற்றது. இந்த நகரத்தின் தட்பவெப்பநிலை முலாம் பழங்களை பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. மிகக் குறைந்த அளவு உற்பத்தி மற்றும் அதிக தேவை காரணமாக, இது உலகின் மிக விலை உயர்ந்த பழமாக உள்ளது.

    2019-ம் ஆண்டில், ஒரு ஜோடி முலாம்பழம் ரூ.31.6 லட்சத்துக்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு முலாம்பழத்தின் விலை ரூ.15 லட்சத்துக்கு மேலாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை இந்தப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு முலாம்பழமும் வளர 100 நாட்கள் ஆகும். இந்த முலாம்பழங்களை உற்பத்தி செய்ய சிறப்பு வகையான உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவற்றின் நறுமணமும், சுவையும் அதிகரித்தும், குறைவான விதையுடனும் காணப்படுகிறது.

    வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தனிமங்கள் இந்த முலாம்பழத்தில் காணப்படுகின்றன.

    உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்த அழுத்தத்தை குறைப்பது, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பது மற்றும் சரும பளபளப்பு தருவது போன்றவை இதன் சிறப்பு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் புற்று நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

    உள்நாட்டு கடைகள், அங்காடிகள், சந்தைகள் போன்றவற்றில் இந்த விலை உயர்ந்த பழம் கிடைப்பது கடினம். விலை அதிகமாக இருந்தாலும் ஜப்பான் மக்கள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    ×