search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Jegan Periya samy"

    • தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    மாநகராட்சியில் முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கிநிதி உதவியுடன், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ. 87.7 கோடி மதிப்பீட்டில் 4 சிப்பந்திகளாக 36.36 கிலோ மீட்டர் நீளம் மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி, மாநகராட்சி பங்குத் தொகையுடன் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாழும் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புல் தோட்டம் ெரயில்வே நிலைய ரோடு, சுந்தரவேல்புரம் மற்றும் அசோக்நகர் ஆகிய பகுதிகளில் நவீன முறையில் உள் இறகுபந்து விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

    எனவே விளையாட்டு அரங்கினை பொதுமக்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சந்தை கட்டணங்க ளின்படி மாநகராட்சியை நேரடியாக தொடர்பு கொண்டு பயன் பெற நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

    மாநகரின் 4 ன்கு மண்டலங்களளிலும் நடைபெற்று வரும் சீர்மிகு நகர அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப உதவியாக பணி நியமனம் பெற்றவர்களின் பனிக்காலத்தை மேலும் நீடிப்பது,

    தனி நபர் ஆக்கிரமிப்பை தடுக்கவும், மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கவும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மீனவ மகளிர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை மூலம் சுய தொழில் பயிற்சி வழங்குதல், ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, முத்துவேல், விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச ்செல்வன்,ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், சேகர், ஹரிகணேஷ் ராஜபாண்டி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • நகர்புற வாழ்வாதார மையம் மூலம் 12 பேர் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் பேசிய தாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது கடற்கரைச்சாலை, பாளையங்கோட்டை ரோடு, அண்ணாநகர், சத்திரம் தெரு, சிதம்பரம் நகர், முனியசாமிபுரம், செல்வநாயகபுரம், செயின்ட் தாமஸ், குருஸ்புரம், போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது.

    இதற்கான உந்து சக்தி நிலையங்களில் பராமரிப்பு செய்து பம்ப் இயக்குவதற்கு நகர்புற வாழ்வாதார மையம் மூலம் 12 பேர் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    மாநகரில் உள்ள பக்கிள் ஓடை சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தெருக்களில் உள்ள மண்மேடுகளை அகற்று தல், கட்டுமான கழிவுகளை அகற்றுதல், மாநகராட்சி பூங்காக்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஜே.சி.பி. எந்திரத்தை இயக்குவதற்கு நிரந்தர ஓட்டுநர்கள் இல்லாத தால் கூடுதலாக பணி யாற்றுவதற்கு செலவினை தொகையை அனுமதித்தல் குறித்து விவாதித்தல்.தெற்கு மண்டலம் 57-வது வார்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 501 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர் 53 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தப் பள்ளிக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வரி விலக்கு அனுமதி கோருதல்,

    தூத்துக்குடி மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகளிலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் 2,887 எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ.5கோடியே 53 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள 15-ம் நிதிக்குழு மானிய நிதியில் இருந்து மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

    மேலும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் தருவை பகுதியில் 2 நுண் உரம் மையம் ரூ.115 லட்சத்தில் மேற்கொள்ள ரூ.63 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மற்றும் தனிநபர் கழிப்பிடம், வீட்டு கழிப்பிடம், சிறுநீர் கழிப்பிடங்கள், சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ்,அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி,நகரமைப்பு குழு தலைவர் ராம கிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச் செல்வன், ஜெயலட்சுமி சுடலை மணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சி லர்களும்,மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவி யாளர் துரைமணி, அதிகாரி கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், சேகர், ஹரி கணேஷ், ராஜபாண்டி உட்பட அதிகாரிகள், அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.  

    ×