search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matheswarar Temple"

    • கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 17-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா தொடங்கியது.
    • கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஏ.எம்.சி. மருத்துவமனை அருகில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ராகுகேது தலமான ஸ்ரீமாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தது.இதையடுத்து கோவில் புனரமைக்கப்–பட்டு கடந்த 17-ந் தேதி சிறப்பு பூஜை–கள் நடத்–தப்–பட்டு விழா தொடங்–கி–யது.

    கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடத்தப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாக வேள்வி, கணபதி வழிபாடு, சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வி வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு , காலை 7 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சோழாபுரி அம்மன், மாதேஸ்வரர் , பரிவார மூர்த்திகள் , கோவில் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான க.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , வாக்கு சித்தர் தம்புரான் ரிசபானந்த சுவாமிகள் மற்றும் கும்பாபிஷேக விழாக்குழுவினர்களான சிவநாதன், பாலசுப்பிரமணியம், வரதராஜன், பழனிச்சாமி, வெங்கடாச்சலம், பாலாஜி, பிரபு சங்கர், தனபால் உள்பட அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு தரிசித்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு 5 வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அன்னதானத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செ.திலகராஜ் தொடங்கி வைத்தார். முன்னதாக காலை 9 மணிக்கு மகா அபி–ஷே–கம் நடைபெற்றது.  

    ×