search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mata Temple"

    • குணமளிக்கும் மாதா ஆலய 30-ம் ஆண்டு பங்கு திருவிழா தொடங்குகிறது.
    • நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    திருச்சி:

    திருச்சி மறைமாவட்டம் கருமண்டபத்தில் பிரசித்தி பெற்றகுணமளிக்கும் மாதா ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு திருவிழா 5 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் தற்போது 30-வது ஆண்டு திருவிழா நாளை (7-ந்தேதி, புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை மறுநாள் (8-ந்தேதி) ஆறுதல் வழங்கும் அமுதசுரபி அன்னை மரியா என்ற மையக்கருத்தில் திருப்பலியும், திருவிழா அன்பிய விருந்தும் நடைபெறுகிறது. 9-ந்தேதி மாலை 6.15 மணிக்கு புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை சயாகராஜ், காட்டூர் பங்குத்தந்தை சேகர் செபாஸ்டின் ஆகியோர் திருப்பலி நடத்துகிறார்கள். தொடர்ந்து பட்டிமன்றம் நடக்கிறது. 10-ந்தேதி பெண் குழந்தைகள் தின கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11-ந்தேதி திருச்சி இளந்தளிர் இயக்குனர் சூசை அலங்காரம், திருச்சி மறைமாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், திருச்சி நலவாழ்வு பணிக்குழு செயலர் ஜோசப் அருள்ராஜன் ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்ற உள்ளனர்.

    அன்று மாலை 6.30 மணியளவில் குணமளிக்கும் மாதாவின் ஆடம்பர திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெறும். இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை சா.அந்தோணி பால்ராஜ் மற்றும் பங்கு பேரவையினர், நிதிக்குழுவினர், இருபால் துறவியர்கள், அன்பியங்கள், பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

    • மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    • சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த தூய செங்கோல் அன்னை ஆலயம் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதிய கொடி மரம் புனிதப்படுத்துதலும் திரு விழா கொடியேற்றத்தையும் தமிழக ஆயர் பேரவை கென்னடி நிறைவேற்றினார்.

    கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    ×