search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mark Rutte"

    • இருதரப்பு இடையேயான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
    • இந்தியா – நெதர்லாந்து உறவுகள் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.

    இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2021 ஏப்ரல் 9 நடைபெற்ற இணையவழி உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவும் பங்கேற்றனர்.

    பின்னர், தொடர்ச்சியாக இரு தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வருகின்றனர். தொடர்ச்சியான உயர்நிலை பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் இந்தியா – நெதர்லாந்து உறவுகள் அண்மை ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.

    இந்நிலையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே-யுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.இந்தியா – நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகள் இடையே வேளாண்மை, உயர்தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.

    இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தியா பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். #NetherlandsPM #MarkRutte #PMModi #Indiavisit

    புதுடெல்லி:

    நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே இரண்டு நாட்கள் பயணமாக இன்று (மே 24-ம் தேதி) காலை இந்தியாவுக்கு வந்தார். அவருடன் நெதர்லாந்து துணை பிரதமர் மற்றும் சில முக்கிய மந்திரிகளும் வந்துள்ளனர். மார்க் ருட்டே இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். 

    இந்தியா வந்த மார்க் ருட்டே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, மார்க் ருட்டே டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #PMModi #Indiavisit
    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். #NetherlandsPM #MarkRutte #Indiavisit

    புதுடெல்லி:

    நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே இரண்டு நாட்கள் பயணமாக இன்று (மே 24-ம் தேதி) இந்தியாவுக்கு வந்தடைந்தார். அவருடன் நெதர்லாந்து துணை பிரதமர் மற்றும் சில முக்கிய மந்திரிகளும் வந்துள்ளனர்.

    அவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit
    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக மே 24-ம் தேதி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit

    புதுடெல்லி:

    நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே வருகிற மே 24-ம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருடன் துணை பிரதமர், விவசாயம், இயற்கை மற்றும் உணவு தரத்துறை மந்திரி, வெளிநாட்டு வர்த்தக மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு மந்திரி, உள்கட்டமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவ மந்திரி, மருத்துவ பராமரிப்பு மந்திரி ஆகியோரும் இந்தியாவுக்கு வர இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா வரும் அவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit
    ×