என் மலர்
செய்திகள்

மே 24-ம் தேதி இந்தியா வருகிறார் நெதர்லாந்து பிரதமர்
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக மே 24-ம் தேதி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit
புதுடெல்லி:
நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ருட்டே வருகிற மே 24-ம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் துணை பிரதமர், விவசாயம், இயற்கை மற்றும் உணவு தரத்துறை மந்திரி, வெளிநாட்டு வர்த்தக மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு மந்திரி, உள்கட்டமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவ மந்திரி, மருத்துவ பராமரிப்பு மந்திரி ஆகியோரும் இந்தியாவுக்கு வர இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா வரும் அவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. #NetherlandsPM #MarkRutte #Indiavisit
Next Story






