என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangalore airport"

    • மங்களூருவில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானம் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.
    • மங்களூருவில் இருந்து புனேவுக்கு வார இறுதியில் 2 நாட்கள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    மங்களூரு:

    தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மங்களூருவில் இருந்து நாட்டின் தலைநகர் டெல்லிக்கு நேரடி விமானம் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மங்களூருவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சார்பில் தினமும் டெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை 6.40 மணியளவில் மங்களூருவில் இருந்து 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டெல்லிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. அந்த விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் காலை 9.35 மணிக்கு தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் டெல்லியில் இருந்து மங்களூரு நோக்கி காலை 6.40 மணிக்கு ஒரு விமானம் 144 பயணிகளுடன் புறப்பட்டது.

    அந்த விமானம் மங்களூரு விமான நிலையத்தை காலை 9.35 மணிக்கு வந்தடைந்தது. இதேபோல் மங்களூருவில் இருந்து இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் டெல்லிக்கு மாலையில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மங்களூருவில் இருந்து புனேவுக்கு வார இறுதியில் 2 நாட்கள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    பூசணிக் காய்களுக்குள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நபரை, மங்களூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். #Mangaloreairport
    மங்களூர்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் இன்று மாலை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகள் அனைத்தையும் ஸ்கேன் செய்தனர். அப்போது ஒரு பயணியின் லக்கேஜை ஸ்கேன் செய்தபோது மிகப்பெரிய உருண்டைகள் இருந்தது தெரியவந்தது. 

    உடனே அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதனுள் மூன்று பெரிய பூசணிக்காய்கள் இருந்தன. போலீசாருக்கு சந்தேகம் வரவே, பூசணிக்காய்களை வெட்டிப் பார்த்தனர். அப்போது பூசணிக் காய்களுக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை கடத்த முயன்ற நபரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அந்த நபர் கர்நாடகாவைச் சேர்ந்த பஷீர் என்பதும், மங்களூரில் இருந்து தோகாவிற்கு செல்லும் விமானத்தில் கஞ்சாவை கடத்த முயன்றதும் தெரியவந்தது.  #tamilnews #Mangaloreairport
    ×