search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam Nadigar Sangam"

    சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் மிரட்டல்கள் வருவதாகவும், தினமும் அச்சத்திலேயே இருப்பதாகவும் பார்வதி கூறியுள்ளார். #Parvathy
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்.

    மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அந்த நடிகைக்கு ஆதரவாகவும், நடிகர் திலீப்புக்கு எதிராகவும் பார்வதி பேசி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.

    பார்வதி அளித்துள்ள பேட்டியில், “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

    அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்குகூட படவாய்ப்புகள் அளிக்கின்றனர்.



    தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஆனால், கேரளாவில் அப்படி இல்லை. இங்கு கதாநாயகர்களை கடவுளாக பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.

    அவர்கள் சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். தினமும் அச்சத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றிப்படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். #Parvathy

    நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார். #ActressAbductionCase #Dileep #Mohanlal
    கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    நடிகை கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரபல நடிகர் திலீப்பை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் திலீப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப் கைது செய்யப்பட்டதும், அவர், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட்டார்.

    திலீப்பை நீக்கியபோது, நடிகர் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

    அவருக்கு பதில் நடிகர் மோகன்லால், மலையாள நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த சங்க கூட்டத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

    நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க மலையாள நடிகைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே நடிகர் சங்கத்தில் நடிகை பலாத்கார விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்பட 3 பேர் ராஜினாமா செய்தனர்.

    இந்த நிலையில் திலீப்பை நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டதை அறிந்ததும் மேலும் சில நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மலையாள படவுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.



    நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதுபற்றி நேற்று கொச்சியில் நடிகர் சங்கத்தலைவர் மோகன்லால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் திலீப், சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை சங்கம் ஏற்றுக் கொண்டது. இது நடிகர் சங்க நிர்வாகிகள் மூலம் நடந்துள்ளது.

    நடிகை விவகாரம் தொடர்பாக அம்மாவில் இருந்து விலகிய நடிகைகள் மீண்டும் சங்கத்தில் சேர வேண்டுமென்றால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

    மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறுபவர்கள் அதை நடிகர் சங்கத்தில் முறையாக புகார் அளிக்க வேண்டும். அதன் பேரில் நடிகர் சங்கம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressAbductionCase #Dileep #Mohanlal

    நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப், சங்கத்துக்கு நன்கொடை கொடுத்ததால் அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நடிகர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் முன்னணி நடிகர் திலீப் குற்றம்சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளானார். வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் அடங்கிய மலையாள நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் சேர்க்கக்கூடாது எனத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.



    கடந்த சனிக்கிழமை கொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இவர்கள் ‘மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து திலீப் வெளியேற்றப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட நடிகை வெளியே உள்ளார். திலீப்பை நீக்காமல் பொதுக்குழுவில் அதுபற்றி பேசுவதாக சொல்கிறார்கள். நடிகைகளுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும் என பல குற்றச்சாட்டுகளை அம்மா அமைப்பு மீது வைத்தனர்.

    இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சங்கம், ‘இது தவறு. கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ‘அம்மா’ உறுதியாக உள்ளது.



    இதற்கிடையே திலீப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர் மகேஷ் பேசியது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லாஸ்ட் பென்ச் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார் மகேஷ்.

    அவர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, ’பார்வதி, ரேவதி போன்றோர் சங்கத்தின் எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அமைப்பில் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அவர்களால் கூற முடியும். ஆனால் திலீப்போ ரூ.5 கோடிக்கும் அதிகமான பணத்தை சங்கத்துக்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அவருக்கு சங்கம் விசுவாசமாக இருந்தால் என்ன தவறு?” எனக் கேட்டுள்ளார். இவரது பேச்சு மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ActressAbductionCase #Dileep #AMMA

    நடிகை கடத்தில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் குறித்து மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். #MohanLal #Dileep
    நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வந்த அவரை, சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

    இதற்கு நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திலீப்பை சேர்க்கும் முடிவை நடிகர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும் திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி மோகன்லாலுக்கு நடிகைகள் கடிதம் அனுப்பினர்.

    இதுகுறித்து ரேவதி கூறும்போது, “நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா இல்லையா என்பதை நடிகர் சங்கம் தெளிவுப்படுத்தும்படி கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் இல்லை” என்று கண்டித்தார். இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது.



    இந்த கூட்டம் முடிந்ததும் மோகன்லால் நிருபர்களிடம் கூறும்போது, “நடிகைகள் கடிதம் சம்பந்தமாக திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து செயற்குழுவில் விவாதிக்கவில்லை. சங்கத்தின் பொதுக்குழு கூட்டித்தான் இதுகுறித்து முடிவு எடுக்க முடியும். அதுவரை நடிகைகள் பொறுத்து இருக்க வேண்டும்” என்று கூறினார். கேரள வெள்ள பாதிப்புக்கு அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்தி நிதி திரட்டவும் செயற்குழுவில் முடிவு செய்துள்ளனர். #MohanLal #Dileep

    ×