search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    திலீப் ரூ.5 கோடி கொடுத்ததால் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் - மலையாள நடிகர் பேச்சால் சர்ச்சை
    X

    திலீப் ரூ.5 கோடி கொடுத்ததால் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் - மலையாள நடிகர் பேச்சால் சர்ச்சை

    நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப், சங்கத்துக்கு நன்கொடை கொடுத்ததால் அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நடிகர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் முன்னணி நடிகர் திலீப் குற்றம்சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளானார். வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் அடங்கிய மலையாள நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் சேர்க்கக்கூடாது எனத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.



    கடந்த சனிக்கிழமை கொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இவர்கள் ‘மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து திலீப் வெளியேற்றப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட நடிகை வெளியே உள்ளார். திலீப்பை நீக்காமல் பொதுக்குழுவில் அதுபற்றி பேசுவதாக சொல்கிறார்கள். நடிகைகளுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும் என பல குற்றச்சாட்டுகளை அம்மா அமைப்பு மீது வைத்தனர்.

    இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சங்கம், ‘இது தவறு. கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது. அதேநேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ‘அம்மா’ உறுதியாக உள்ளது.



    இதற்கிடையே திலீப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர் மகேஷ் பேசியது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லாஸ்ட் பென்ச் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார் மகேஷ்.

    அவர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, ’பார்வதி, ரேவதி போன்றோர் சங்கத்தின் எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அமைப்பில் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே அவர்களால் கூற முடியும். ஆனால் திலீப்போ ரூ.5 கோடிக்கும் அதிகமான பணத்தை சங்கத்துக்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அவருக்கு சங்கம் விசுவாசமாக இருந்தால் என்ன தவறு?” எனக் கேட்டுள்ளார். இவரது பேச்சு மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ActressAbductionCase #Dileep #AMMA

    Next Story
    ×